மின் கம்பத்தில் தலைகீழாக தொங்கி ஆட்டம் போட்ட இளைஞர் - தீயாய் பரவும் வீடியோ

x

ஜோலார்பேட்டை அருகே கோயில் திருவிழாவில், மின் கம்பத்தில் தலைகீழாக தொங்கியபடி இளைஞர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் வரதகவுண்டர் வட்டம் பகுதியிலுள்ள மாரியம்மன் கோயிலில், ஆண்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது. திருவிழா நிகழ்ச்சிகளுக்காக முக்கிய வீதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், இளைஞர் ஒருவர் மின் கம்பத்தில் தலைகீழாக தொங்கியபடி நடனமாடினார். இதுதொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்