பாப்கார்னை நைசாக லவட்டிய இளைஞர்கள் - பலே திருடர்களை பிடிக்க தியேட்டர் வெளியிட்ட நூதன ஆஃபர்

x

பாப்கார்ன் திருடியவர்களைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், பாப்கார்ன் இலவசமாக வழங்கப்படும் என பிரபல திரையரங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் விளம்பரம் செய்துள்ளது.

சென்னை அனகாபுத்தூரில் பிரபல திரையரங்கம் ஒன்று அமைந்துள்ளது.

இங்கு இளைஞர்கள் சிலர் பாப்கார்ன் திருடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து, பாப்கார்ன் திருடியவர்களை கண்டுபிடித்துக் கொடுத்தால், பாப்கார்ன் இலவசமாக வழங்கப்படும் என அந்த திரையரங்கம் சார்பில் அவர்களது ட்விட்டர் பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்