சேரும் சகதியுமான மண் சாலையில் நாற்று நட்ட இளைஞர் - வீடியோ வைரல்

x

காரைக்கால் அருகே சேரும் சகதியுமாக காணப்பட்ட மண் சாலையில் நெல் விதைத்து இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். நல்லெழுந்தூரு குடியிருப்பு பகுதியில் உள்ள சாலை பயன்படுத்த முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கி சேரும், சகதியுமாக இருந்தது. இதனால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறும் அப்பகுதி மக்கள், சாலையை சீரமைக்க கோரி புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர். இந்த நிலையில் மோசமான சாலையில், நெல் பயிர்களை நட்டு வைத்து இளைஞர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்