தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட மனவிரக்தி..?இரண்டு குழந்தைகளோடு தாய் தற்கொலை...

x

இறந்து போன சோபனாவுக்கும், திருச்சியில் உள்ள எடமலைப்பட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த மனோஜ்குமாருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருக்கிறது. மனோஜ்குமாருகு தாய் இல்லாத்ததால் அவது சித்தப்பா மற்ரும் சித்தி ஆகியோர் தான் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும், 11 மாத ஆண் குழந்தையும் இருந்துள்ளது. மனோஜ்குமார் சொந்தமாக பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வந்திருக்கிறார்.

ஆனால் இரண்டாண்டுகளுக்கு முன்பு பலரது வாழ்கையையும் திசை மாற்றிப் போட்டா கொரோனா காலம், சோபனாவின் குடும்பத்தையும் சின்னா பின்னமாக்கி இருக்கிறது. மனோஜ்குமாரின் பர்னிச்சர் பிஸினஸ் நஷ்டத்தில் படுத்துவிடவே முதலாளியாக இருந்தவர் தொழிலாளியாக மாறி இருக்கிறார். கணவரின் குடும்ப பாரத்தை பாதியாக பங்கிட்டுக் கொண்ட சோபனா, அவர் பங்கிற்கு ஒரு ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.என்னதான் இருவரும் வேலைக்குச் சென்றாலும், தொழில் நஷ்டமானதில் இருந்து குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போயிருக்கிறது. இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு மனோஜ்குமார் ஒரு வேலை விஷயமாக கொடைக்காணலுக்கு சென்றிருக்கிறார்.சம்பவம் நடந்த அன்று ஊரில் இருந்து வீடு திரும்பியவர் கதவை தட்டி இருக்கிறார்.

ஆனால் உள்ளே இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த மனோஜ்குமார் ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த்த போது, மனைவியும் இரண்டு குழந்தைகளும் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு கத்தி கூச்சலிட்டிருக்கிறார். ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள். குடும்பத்தில் நடந்த சண்டையாலும், வருமையினாலும் ஏற்பட்ட மன அழுத்தத்தால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என சொல்லப்பட்டது. ஆனால் சோபனாவின் தாயாரும் சகோதரர்களும் அடிக்கடுக்காக பல குற்றசட்டுகளை போலீசாரின் முன்னிலையில் வைத்திருக்கிறார்கள்.தொழில் நஷ்டமானதால் மனோஜ்குமார் மன ரீதியாக மிகவும் பாதிக்கபட்டிருக்கிறார், புகையிலையை போட்டு வீட்டுக்குள்லேயே எச்சில் துப்புவது, வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் களைத்து போடுவது என வித்யாசமக நடந்து கொண்டிருந்திருக்கிறார்.இதனால் அக்கம் பக்கத்தினர் அடிக்கடி சோபானா வின் கணவரை மனநோயாளி என குத்திகாட்டி பேசி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் சோபனா வின் குழந்தைகளுக்காக அவரது சகோதரன் வீட்டிற்கு ஏ. சி வாங்கிக் கொடுத்திருக்கிறார். இது மனோஜின் தாழ்வு மணபாண்மையை இன்னும் அதிகறித்திருக்கிறது.அதோடு மனோஜ்குமாரின் சித்தி, சித்தப்பா இருவரும் அத்தனைக்கும் காரணம் சோபனாவின் குடும்பதாற்களும் தான் என தப்பு கணக்கு போட்டிருக்கிறார்கள். இதனால் இரு குடும்பத்திற்கும் அடிக்கடி தகராறு வெடித்திருக்கிறது. இந்த நிலையில் தான் மனோஜ்குமார் கொடைகாணலுக்கு சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்த சோபனா தனது சின்ன மாமியார் மற்றும் மாமனார் வீட்டிற்கு சென்றிருக்கிறார். அங்கு இருவருக்கும் பிரச்சனை நடந்ததாக சொல்படுகிறது. இதனால் மாமியார் மாமனாரால் தான் தனது மகள் தூக்கு போடும் நிலைக்குச் சென்றதாக சோபனாவின் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். போலீசாரின் முழுமையான விசாரனைக்கு பிறகே நடந்தது தற்கொலையா அல்லது கொலையா என்ற முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வரும்.


Next Story

மேலும் செய்திகள்