பாத்தா அப்பாவி.. செய்யுற வேலை 'படுபாவி'சுடுகாட்டில் சிக்கிய ரியல் 'கோலமாவு கோகிலா'..!

x

நுங்கம்பாக்கத்தில் கஞ்சா மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை செய்து வந்த பெண் உட்பட 3 பேர் கைது - 1.5 கிலோ கஞ்சா மற்றும் 75 நைட்ரோவிட் மாத்திரைகள் பறிமுதல்....சென்னை நுங்கம்பாக்கம், சுடுகாடு பகுதியில் சில மர்ம நபர்கள் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் நுங்கம்பாக்கம் போலீசார் நுங்கம்பாக்கம் சுடுகாடு பகுதியில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் பொழுது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, விற்பனைக்காக கஞ்சா மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து விற்பனைக்காக கஞ்சா மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி வைத்திருந்த சூளைமேடு பாரதியார் தெரு பகுதியை சேர்ந்த ராஜு (வயது 27), சேத்துப்பட்டு 2வது தெரு, எம் எஸ் நகர் பகுதியைச் சேர்ந்த அஜய்குமார் (வயது 27) மற்றும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சாந்தி ப்ரியா (வயது 22) ஆகிய 3 பேரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.மேலும் கைது செய்யப்பட்ட மூன்று பேரிடம் இருந்தும் 1.50 கிலோ கஞ்சா, 75 நைட்ரோவிட் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் நுங்கம்பாக்கம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட ராஜு மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.பின்னர் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்