இன்னைக்கு நீங்க அங்க வந்து பாக்கணும்..எம்.பி வாகனத்தை வழிமறித்த மூதாட்டி..நீலகிரியில் பரபரப்பு

x

கோத்தகிரி அருகே நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் வாகனத்தை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வயதான பெண்மணியால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் கோத்தகிரி பேருராட்சியின் திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பின் புறப்பட்டு சென்றனர். அப்போது வயதான பெண்மணி ஒருவர் எம்.பி மற்றும் அமைச்சரின் வாகனத்தை மறித்து அவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். சாலை வசதி கோரி பல ஆண்டுகளாக மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்பு போலீசார் அவரை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்