திருமலையில் ஈஸியா சுற்றி வரலாம்.. கூகுள் மேப் வசதியுடன் க்யூ ஆர் கோடு ஸ்கேன்.. தேவஸ்தானம் அசத்தல்

x

திருமலையில் ஒரு இடத்தில் இருந்து ஒவ்வொரு கவுன்டர்களுக்கும் செல்வதற்கான தகவல்களை அறிய புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

திருமலையில், விருந்தினர் இல்லம், விடுதி, லட்டு கவுண்டர்கள் என 40க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த இடங்களுக்குச் செல்வதற்கான வழிகளை, பக்தர்கள் மற்றவர்களிடம் கேட்கும் நிலை உள்ளது.

இந்த சிரமத்தை போக்க கியூ ஆர் கோடு என்ற புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பக்தர்கள் ஆன்ட்ராய்டு போனில் ஸ்கேன் செய்தால், பேருந்து நிலையத்தில் இருந்து, அங்குள்ள அலுவலங்களுக்கு செல்லும் வரைப்படம் காட்டும்.

இந்த புதிய முறையை, தேவஸ்தான அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்