"தமிழன்னா இளக்காரமா போச்சா.. கேரளகாரன மட்டும் விட்டுறீங்க".. கிழித்து எறிந்த நபர்.. மிரண்ட போலீஸ்

x

அதிக பாரம் ஏற்றிக் கொண்டு சீருடை அணியாமல் வந்த லாரி ஓட்டுநருக்கு போலீசார் அபராதம் விதித்த நிலையில், காவலர்களுடன் ஓட்டுநர் வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி நாடுகாணி பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடியில், கேரளாவில் இருந்து அதிக பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இதையடுத்து அந்த லாரிக்கு போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். ஓட்டுநர் சீருடை அணியாதது குறித்து போலீசார் கேட்டதற்கு, ஆத்திரம் அடைந்த அவர் வாக்குவாதத்தில் ஈடுபடத் துவங்கினார். கேரள வாகனங்களுக்கு எந்த ஒரு அபராதமும் விதிக்கப் படுவதில்லை என்றும், தமிழக வாகனங்களுக்கு மட்டும் அபராதம் விதிப்பதாகவும் கூறி நீண்ட நேரம் வாக்குவாதம் நடத்தினார். இந்தக் காட்சிகள் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்