கிரிமினல்களை கதறவிடும் 'யோகி' மாடல்.. விரட்டி விரட்டி 183 பேர் என்கவுன்ட்டர் - 13 நாட்களுக்கு ஒருவர் காலி..!

x

உத்தரபிரதேசத்தில் மாபியாக்களுக்கு எதிரான கொள்கையை கொண்டிருக்கிறது யோகி ஆதித்யநாத் அரசு... ஆட்சிக்கு வந்ததில் இருந்து மாபியாக்கள் கொட்டத்தை அடக்கும் நடவடிக்கையை அம்மாநில அரசு முடக்கிவிட்டுள்ளது. இதனால் என்கவுண்டர்கள் அங்கு தொடர் கதையாக இருக்கிறது.

இப்போது வழக்கறிஞர் உமேஷ் பால் கொலை வழக்கு தொடர்ச்சியாக, உ.பி. முன்னாள் எம்எல்ஏவும், பிரபல ரவுடியுமான அத்திக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் ஜான்சி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

நாட்டையே திரும்பிப் பார்க்க செய்திருக்கும் இந்த என்கவுண்டர் யோகி ஆதித்யநாத் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நடக்கும் 183 ஆவது என்கவுண்டர் ஆகும்.

2017 மார்ச்சில் யோகி ஆதித்யநாத் உத்தரபிரதேச முதல்வரான பிறகு மாநிலத்தில் போலீசார் 10 ஆயிரத்து 900 அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். இதில் 183 பேர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார்கள் எனவும் 23 ஆயிரத்து 300 கிரிமினல்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் 5 ஆயிரத்து 46 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதாவது மாநிலத்தில் 13 நாட்களுக்கு ஒரு கிரிமினல் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகளில் போலீஸ் தரப்பில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் ஆயிரத்து 443 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த என்கவுண்டர்களை எல்லாம் குற்றங்களுக்கு எதிரான ஜீரோ பாலிசி என யோகி அரசு கொண்டாடினாலும், என்கவுண்டர்கள் எல்லாம் போலியானவை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. இந்த என்கவுண்ட ர்கள் தொடர்பாக விரிவான விசாரணையை மேற்கொள்ள வலியுறுத்துகிறது மாநில எதிர்க்கட்சிகளான சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ். ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்கும் உத்தரபிரதேச அரசு மற்றும் போலீஸ், 2017-ல் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மேம்பட்டுள்ளது என தெரிவிக்கிறது.

இதற்கிடையே உத்தரபிரதேசத்தின் கிரிமினல்கள் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார்கள் என ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது சமாஜ்வாடி. பாஜக அரசு, யோகி ஆதித்யநாத் சமூகத்தை சேர்ந்த கிரிமினல்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இப்போதைய ஆசாத் என்கவுண்டர் வாயிலாக யோகி ஆதித்யநாத் அரசு, உள்ளாட்சி தேர்தலில் மதரீதியாக வாக்குகளை வேண்டுமென்றால் பிரிக்கலாம் என அகிலேஷ் யாதவ் விமர்சனம் செய்திருக்கிறார். மறுபுறம் போலீசாரை வெகுவாக பாராட்டியிருக்கிறார் முதல்வர் யோகி ஆதியநாத்.........


Next Story

மேலும் செய்திகள்