அன்று பொம்மையிடம் ஆசிபெற்ற DKS இன்று சித்தராமையாவிடம் வாழ்த்து பெற்ற எடியூரப்பா மகன்..!

x

கர்நாடகாவில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா கூட்டத்தொடரில் நேற்று கலந்து கொள்ளாத நிலையில், இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார். பதவி பிரமாணம் செய்து கொள்வதற்கு முன்பாக, சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது விஜயேந்திராவின் தோளில் தட்டி, தந்தையை போல் சிறந்த அரசியல்வாதியாக வர வேண்டுமென சித்தராமையா வாழ்த்தினார். இதேபோல், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.எச். முனியப்பா, லட்சுமி ஹெப்பாள்கர் உள்ளிட்ட உள்ளிட்டோரையும் விஜயேந்திரா சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வான நிலையில், எதிர் அணியுடன் விஜயேந்திரா நட்பு பாராட்டியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்