முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10,000 வழங்கிய யாசகர் - யாசகம் எடுத்து இதுவரை ரூ.51 லட்சம் வரை உதவி

x

முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.10,000 வழங்கிய யாசகர் - யாசகம் எடுத்து இதுவரை ரூ.51 லட்சம் வரை உதவி

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த யாசகர் ஒருவர், முதல்வரின் நிவாரண நிதிக்காக 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு யாசகம் எடுக்கத் தொடங்கிய பாண்டி, தனக்கு கிடைக்கும் பணத்தைக் கொண்டு அரசு பள்ளிகளுக்கு மேஜை, நாற்காலி, தண்ணீர் வழங்கும் இயந்திரம் ஆகியவற்றை வழங்கி உள்ளார். கொரோனா காலத்தில் இருந்து யாசகம் பெற்று கிடைத்த தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி வருகிறார். அந்த நிதிக்கு இதுவரை 51 லட்ச ரூபாயை பல கட்டங்களாக வழங்கி உள்ளார். முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குவதற்கு 10 ஆயிரம் ரூபாயுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். ஆட்சியர் மதுசூதன் ரெட்டி பணி நிமித்தமாக வெளியூர் சென்றுவிட்டதால், வங்கி காசோலை எடுத்து முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்