"மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பதவி- விரைவில் தேர்தல்" - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புது தகவல்

x

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுகள் 2022-ன் சின்னம், அடையாளம், சீருடை மற்றும் பாடலை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள இந்திராகாந்தி அறக்கட்டளையில் துவக்கி வைத்தனர். தொடர்ந்து பேசிய அனுராக் தாக்கூர், டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தும் விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வருவதாக தெரிவித்தார். இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க இந்திய ஒலிம்பிக் சங்கம் விரைவில் தேர்தலை நடத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் காவல்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் தாக்கூர் உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்