உயிர் இல்லாததை பாடையில் வைத்து சுடுகாட்டில் எரித்த மக்கள் - வினோத காட்சிகள்

x

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே, மழை வேண்டி உருவ பொம்மைக்கு பாடை கட்டி சுடுகாட்டில் எரித்து நூதன வழிபாடு நடத்தப்பட்டது. செக்காரக்குடி கிராமத்தில் கடந்த வாரம் ஊர்க்கூட்டம் நடத்தி, கொடும்பாவி கட்டி எரிக்கும் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டனர். அதன்படி, உருவ பொம்மைக்கு பாடை கட்டிய பொதுமக்கள், மேள தாளத்துடன் குறத்தி ஆட்டம் போன்றவை நடத்தி ஒப்பாரி பாடலுடன் சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். அங்கு கொடும்பாவியை எரித்து நூதன முறையில் வழிபாடு நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்