சாப்பிடும் போது உணவில் நெளிந்த புழு.. சென்னையில் பிரபல ஹோட்டலில் அதிர்ச்சி - கஸ்டமரிடம் சரண்டர் ஆன மேனேஜர்

x

தனியார் உணவு விடுதியில் வழங்கப்பட்ட உணவில், புழு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.... நடந்த சம்பவத்தை விளக்குகிறது இந்த தொகுப்பு

வயிறு முழுக்க பசியுடன், அரக்க, பரக்க சென்று சாப்பிட அமர்ந்தவரின் தட்டில் புழு ஊறிக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும். நினைத்து பார்க்கும் போதே அருவருப்பான உணர்வை ஏற்படுத்தும் இந்த காட்சி, உண்மையாகவே தலைநகர் சென்னையில் உள்ள ஆவடியில் நடந்திருக்கிறது...

ஆவடியை அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் 23 வயதான தனுஷ். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வருகின்றார். இந்த நிலையில்தான், தனுஷின் உறவினர்கள் ஊரில் இருந்து வந்திருந்தனர். அவர்களை உபசரிக்க வேண்டும் என்பதற்காக தன் அண்ணனையும், கூடவே அழைத்துச் சென்று, திருநின்றவூர் சி.டி.எச் சாலையில் உள்ள தனியார் உணவகமொன்றில், உணவருந்த சென்றுள்ளார்.

எல்லோரும் பசியில் இருந்த நிலையில்,பிடித்த உணவை ஆர்டர் செய்து கொண்டிருந்தனர். உணவு மேஜைக்கு வந்தவுடன் சாப்பிட தொடங்கியுள்ளனர். அப்போது ஸ்பெஷல் மீல்ஸ்-ல் இருந்து சாம்பார் சாதத்தில் புழு இருந்திருக்கிறது. இதை பார்த்து அதிர்ச்சியான தனுஷ், அங்கிருந்த ஊழியர்களை அழைத்து வந்து காட்டியிருக்கிறார். உடனே உணவு விடுதி நிர்வாகத்திடமும் வாக்குவத்தில் ஈடுபட அங்கே கூட்டம் கூடிவிட்டது.

விடுதி மேலாளருக்க இந்த செய்தி சென்று சேர்ந்ததும், அவர் தங்கள் மீதான தவறை ஒப்புக் கொண்டார். தற்போது உணவில் புழு இருந்த அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி, சம்பந்தப்பட்ட தனியார் உணவு விடுதி கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

தனியார் உணவு விடுதிகளில் அழுகிய காய்கறிகளை பயன்படுத்துவது, இறைச்சிகளை பயன்படுத்துவம் தற்போது பரவலாகியுள்ளது. உணவுத்துறையினரும், பலமுறை ரெய்டுகள் நடத்தினாலும், பழையபடி சுகாதாரமற்ற முறையில் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இனி வரும் காலங்களில் இது போன்ற குற்றங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட உணவகத்தை சீல் வைத்து, அபராதம் விதிப்பதோடு நிறுத்தாமல், தண்டனைகளை பல மடங்கு கடுமையாக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்