பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தியருக்கு முக்கிய பதவி.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

x
  • உலக வங்கியின் அடுத்த தலைவராக, மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அஜய் பங்காவை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
  • உலக வங்கி குழுமத்தின் தலைவராக 2019-ஆம் ஆண்டு பதவியேற்ற டேவிட் மால்பாஸின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு நிறைவடைகிறது.
  • இதற்கிடையே, உலக வங்கித் தலைவர் பதவியில் இருந்து முன்கூட்டியே விலக இருப்பதாக, கடந்த சில தினங்களுக்கு முன் அவர் அறிவிப்பு வெளியிட்டார்.
  • இந்நிலையில், மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் அஜய் பங்காவை, உலக வங்கியின் அடுத்த தலைவராக ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா, ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார்
  • . தில்லியில் உள்ள கல்லூரியிலும், அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் கல்வி நிறுவனத்திலும் படித்துள்ளார்.
  • அவருக்கு இந்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு, பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்