“தொழிலாளர்கள் விவகாரம்... அதிகாரிகள் தமிழகம் பயணம்" - பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தகவல்

x

பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று தமிழகம் செல்லும் என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறி உள்ளார். பீகார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களுக்குப் நிதிஷ் குமார் பேட்டியளித்தார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக 4 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும், அந்தக் குழு இன்று தமிழகம் செல்ல உள்ளதாகவும் நிதிஷ் குமார் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்