“அண்ணா ஒரு வேட்டி இருந்தா என்மேல போத்தி விடுங்க...“ - ரத்த வெள்ளத்தில் பெண் சொன்ன வார்த்தைகள் - நெஞ்சை உலுக்கும் வீடியோ

“அண்ணா ஒரு வேட்டி இருந்தா என்மேல போத்தி விடுங்க...“ - ரத்த வெள்ளத்தில் பெண் சொன்ன வார்த்தைகள் - நெஞ்சை உலுக்கும் வீடியோ
Published on
• ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி. • இவர் தனது குடும்பத்துடன் சேர்ந்து திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில், தண்டபாணியின் மகன் சுபாஷ் உடன் பணியாற்றிய அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனுஷா என்பவரை காதலித்து வந்துள்ளார். • இதில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி காதலியை திருமணம் செய்து கொண்ட சுபாஷ், சொந்த ஊரான அருணபதி கிராமத்தில் வந்து பாட்டி கண்ணம்மாவுடன் வசித்து வந்திருக்கிறார். • இதையறிந்து ஆத்திரமடைந்த சுபாஷின் தந்தை தண்டபாணி, அருணபதி கிராமத்திற்கு வந்து தனது மகனையும், அடைக்கலம் கொடுத்த தனது தாயையும் சரமாரியாக வெட்டிக் ஆணவக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. • மேலும் மருமகளான அனுஷாவையும் அவர் கொடூரமாக வெட்டிய நிலையில் படுகாயங்களுடன் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். • தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தலைமறைவான தண்டபாணியை தேடி வருகின்றனர். • அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. • சமீபத்தில் கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக்கொலை அதிர்ச்சி அடங்குவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது பலரையும் பதற வைத்திருக்கிறது..
X

Thanthi TV
www.thanthitv.com