“என் வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது“ - அனைவரையும் கலங்கடித்த டிஐஜி விஜயகுமாரின் FB பதிவு

x

டிஐஜி

விஜயகுமாரின் ஆரம்ப கால முகநூல் பதிவு பலரையும் கலங்கடித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

விஜயகுமார் ஐபிஎஸ்...


நிதான பேச்சு, வழக்குகளை கையாளும் விதம் , உடன் புணிபுரியும் காவலர்களை அரவணைத்து செல்லும் பாங்கு என தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெரும்பாலான காவலர்களுக்கு அதிகாரத்தால் இல்லாமல், அன்பின் மிகுதியால் நெஞ்சில் பதிந்துபோன பெயர்...

இப்படிப்பட்ட ஒரு ஐபிஎஸ் அதிகாரியின் தற்கொலை முடிவை அவரின் நெருங்கிய வட்டாரங்கள் ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்து வரும் நிலையில், விஜயகுமாரின் ஆரம்பகால முகநூல் பதிவு தற்போது வரைலாகி அனைவரையும் கலங்கடித்து வருகிறது...

தேனி மாவட்டம் அணைக்கரைப்பட்டி தான் எனது சொந்த ஊர்... கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த தந்தை, பள்ளி ஆசிரியையான தாய் என கண்டிப்புடனும், ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்ட நான், தனது பள்ளிப்படிப்பை தமிழ் வழிக்கல்வியிலே நிறைவு செய்தேன்....

அப்பாவின் ஆசையோ டாக்டர், இன்ஜீனியர் என இருக்க.. கடை நிலை ஊழியராக இருக்கும் அப்பா, பெரும் அதிகாரம் படைத்த அரசு அதிகாரியாக இருந்தால் எப்படி இருக்கும் என கனவு கண்டு அந்த நிலையை நாம் அடைய வேண்டும் என்ற லட்சியம் கொண்டேன்...

கல்லூரி படிப்பு முடிந்த வுடன் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கு தயாரான நான், தனது பொருளாதார தேவையை பூர்த்தி செய்ய ஜெராக்ஸ் கடையில் பணிபுரிந்தேன்...

நம் இலக்கை எட்டும் முன், ஏதோ ஒரு வேலையில் ஒட்டிக்கொண்டு வாழ்க்கையை கடப்போம் என நினைக்கும் அந்த மன நிலை, திடீரென்று நம் இலக்கை மறக்கடித்து இதுவே போதும் என்ற நிலைக்கு நம்மை கொண்டு வந்துவிடும்...

அதில் இருந்து உடனடியாக மீளாவிட்டால், வாழ்க்கைப் பயணம் திசை மாறிப்போகும்... எனவே உடனே பணியை துறந்த நான், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக வெறித்தனமாக படிக்க தொடங்கினேன்... 1999 முதல் குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பித்தேன்....


ஆரம்பத்தில் பல தோல்விகளை சந்தித்த நான், ஏழு முயற்சிகளில்... நான்கு முறை மெயின் தேர்வு வரையிலும், மூன்று முறை நேர்முகத் தேர்வு வரையும் சென்று.. ஒருவழியாக 2002 - டிஎஸ்பியாக தேர்ச்சி பெற்றேன்

தேர்வுக்கான ஆயத்தங்களைக் காட்டிலும், அந்த காலகட்டங்களில் நான் கடந்து வந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது... டிஎஸ்பியாக இருக்கும்போதே ஐபிஎஸ் தேர்வுக்கு தன்னை தயார் செய்தபோது, இதனை கேள்விப்பட்ட உயரதிகாரிகள், ஆறு இடங்களில் என்னை பணிமாற்றம் செய்தனர்..

சிவில் சர்வீசஸ் விண்ணப்பத்தில் விருப்பப் பணியில் ஐ.பி.எஸ் என்று மட்டுமே எழுதிய நான், ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ். பிரிவின் கீழ் பூஜ்யத்தையே குறிப்பிட்டு இருந்தேன்....

அப்போதைய தமிழக முதல்வரிடம் சிறப்பு அனுமதி பெற்று, ஓர் ஆண்டு விடுமுறையில்தான் பயிற்சிக்கே சென்றேன்... ஒருவேளை தன்னை வேறுமாநிலங்களில் ஐபிஎஸ் அதிகாரியாக நியமித்தால் பணியை துறந்து தமிழகத்தில் டிஎஸ்பியாகவே பணியை தொடரலாம் என்ற மன நிலையில் இருந்தேன்.

இவ்வாறு பதிவிட்டு பலருக்கு உதவேகம் கொடுத்த விஜயகுமார், வாழ்க்கையின் கடினமான காலங்களில் நேர்மறை எண்ணம் கொண்டவர்களை அருகில் வைத்துக்கொண்டு அதை கடந்து செல்லுங்கள் என கூறிய அவரே, தற்போது தற்கொலை என்ற தவறான பாதையை தேர்ந்தெடுத்து உயிரை மாய்ந்துக்கொண்டிருப்பது அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்