சூறாவளியாக சுழன்ற சோஃபி டிவைன்... குஜராத் அணியை ஊதித்தள்ளிய பெங்களூரு - பிளே ஆஃப் வாய்ப்பு இருக்கா?

x

மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த குஜராத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்தது. பின்பு விளையாடிய பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. சிறப்பாக விளையாடிய சோஃபி டிவைன் 99 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி 2வது வெற்றியை பெற்றுள்ளது. மேலும் இந்த 2 போட்டிகளின் முடிவால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 2வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்