மகளிர் ஐபிஎல் டி20 தொடர்.. மிதாலி ராஜ்க்கு புதிய பொறுப்பு..! | Womens | IPL | Cricket

மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் அணியின் ஆலோசகராக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நியமிக்கப்பட்டு உள்ளார். வருகிற மார்ச் மாதம் மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் மும்பை, பெங்களூரு, குஜராத் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், தங்கள் அணியின் ஆலோசகராக மிதாலி ராஜை குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நியமித்து உள்ளது. இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள மிதாலி ராஜ், மகளிர் கிரிக்கெட் தொடர்ந்து வளர்ந்து வருவதாகக் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com