டென்னிஸில் OUT, கிரிக்கெட்டில் IN... மகளிர் பிரிமியர் லீக்கில் சானியா மிர்சா..

x

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா புதிய பொறுப்புடன் மகளிர் பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் களமிறங்குகிறார்.

ஐபிஎல் போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த தொடரில், பெங்களூரு அணியின் ஆலோசகராக சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் முடிந்த ஆஸ்திரேலிய ஓபனுடன் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் இருந்து ஓய்வு அறிவித்த சானியா மிர்சா, கிரிக்கெட்டில் கால் பதிக்க உள்ளார்.

பெங்களூரு அணியில் ஸ்மிருதி மந்தனா, ஆஸ்திரேலிய நட்சத்திர வீராங்கனை எலிஸ் பெர்ரி உள்ளிட்டோர் அங்கம் வகித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்