அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மகளிர் ஐ.பி.எல். தொடரை நடத்த, பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

x

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் மகளிர் ஐ.பி.எல். தொடரை நடத்த, பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

5 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஐபிஎல் தொடர், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 5 அணிகளிலும் தலா 18 வீராங்கனைகளும், அதில் 6 பேர் வெளிநாட்டு வீராங்கனைகளும் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும் நிலையில், லீக் சுற்றின் முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும். மேலும் 2 மற்றும் 3 ஆவது இடங்களில் உள்ள அணிகள் மோதி, அதில் வெல்லும் அணி 2வது அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். மகளிர் ஐ.பி.எல்.லில் மொத்தம் 22 போட்டிகளை நடத்தவும், தற்போது ஊர் பெயரில் அல்லாமல் தெற்கு, வடக்கு என பிராந்திய அடிப்படையில் அணிகளை உருவாக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்