சாக்கடையில் கிடந்த பெண்ணின் தலை.. பிரிட்ஜில் துண்டு துண்டாக உடல்..வீட்டு ஓனரின் திகில் சம்பவம்

x

தெலங்கனா மாநிலம் ஐதராபாத்தில், டெல்லி ஷ்ரத்தா கொலை வழக்கை மிஞ்சும் அளவுக்கு கொடூர கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தில்சுக் நகரில் வசித்து வந்தவர் அனுராதா. இவர் தனது கணவரை பிரிந்து சந்திரமோகன் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார். இந்நிலையில், சில நாட்கள் முன்பு அனுராதா காணாமல் போனதாக கூறப்படும் நிலையில், அருகில் உள்ள சாக்கடையில் அவரின் தலை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் துப்புரவு பணியாளர் கண்டெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அனுராதா வாடகைக்கு வசித்து வந்த வீட்டின் உரிமையாளர் சந்திரமோகனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இருவரும் தகாத உறவில் இருந்து வந்ததும், இதனாலயே அனுராதாவின் கணவர் அவரை பிரிந்து சென்றதும் தெரியவந்தது. கணவர் பிரிந்து சென்றதும் ஒரே வீட்டில் இருவரும் கணவர் மனைவிபோல் வாழ்ந்து வந்த நிலையில், அனுராதாவிடம் இருந்து 7 லட்ச ரூபாய் பணத்தை சந்திரமோகன் கடன் வாங்கியுள்ளார். இந்த பணத்தை திருப்பி கேட்டபோது ஏற்பட்ட தகராறில், அனுராதாவை கொன்றது அம்பலமானது. கட்டிங்பிளேடு மற்றும் கத்தியால் உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்ததும் தெரியவர, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்