மகளிர் IPL - அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ

x
  • மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டு உள்ளது.
  • 5 அணிகள் பங்கேற்கும் முதலாவது மகளிர் ப்ரீமியர் லீக் டி20 தொடர் வருகிற மார்ச் மாதம் 4ம் தேதி முதல் மார்ச் மாதம் 26ம் தேதி வரை மும்பையில் நடைபெற உள்ளது
  • .இதற்கான வீராங்கனைகள் ஏலம் நடந்துமுடிந்துள்ள நிலையில், லீக் போட்டிகள், பிளே-ஆஃப் போட்டிகள் என மொத்தம் 22 போட்டிகளாக இந்த தொடர் நடைபெறும் என்று பிசிசிஐ கூறி உள்ளது.
  • மார்ச் 4ம் தேதி நடைபெறும் முதல் லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளும், மார்ச் 5ம் தேதி நடைபெறும் போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகளும் மோத உள்ளன.
  • மார்ச் 24ம் தேதி எலிமினேட்டர் போட்டியும், மார்ச் 26ம் தேதி இறுதிப் போட்டியும் மும்பையில் நடைபெற உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்