இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட்..! | கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி

இலங்கைக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. மூன்று டி20 போட்டிகளில், முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில், 2வது போட்டி இலங்கையின் தம்புள்ளா நகரில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, 5 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com