மகளிர் போலீசாரின் பாய்மர படகு பயணம் - தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி

தமிழ்நாடு மகளிர் காவலர்கள் மட்டும் கலந்துகொள்ளும் நீண்ட தூர பாய்மர படகு பயணத்தை சென்னையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல் துறையில் பெண் காவலர்களின் 50வது பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, பழவேற்காடு முதல் கோடியக்கரை வரை, சுமார் 1000 கிலோமீட்டர் தொலைவினை பாய்மரப் படகு மூலம் கடக்கும் கடல் பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அமைச்சர் சேகர்பாபு, டி.ஜி.பி சைலேந்திர பாபு ஆகியோர் உடனிருந்தனர். பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் பாலநாகதேவி பவானீஸ்வரி, மகேஸ்வரி, நிஷா ஆகியோர் தலைமையில் 30 காவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com