இளம் பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டல்.. சிக்கிய சிறை வார்டன்கள்.. பாய்ந்த அதிரடி உத்தரவு..

சேலத்தில் இளம் பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து மிரட்டிய 2 சிறை பாதுகாப்பு அதிகாரிகளும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் மத்திய சிறையில் பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றி வந்தவர்கள் அருண் மற்றும் சிவசங்கர்.

இவர்கள் இருவர் மீதும் இளம் பெண் ஒருவர் தன்னை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டுவதாக கூறி போலீசில் புகாரளித்தார்.

புகாரின் அடிப்படையில் இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சிறை காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com