பிரசவத்திற்கு பிறகு வெறும் தரையில் குழந்தைகளோடு படுத்திருக்கும் பெண்கள் - மருத்துவமனையில் அவலம்

x

பிரசவம் முடிந்து பச்சிளங்குழந்தைகளோடு பெண்கள் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ள அவலம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது...

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும், அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதிலும் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காட்டி வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன... இந்நிலையில், பிரசவ வார்டில் பிரசவம் முடிந்த கையோடு பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளனர்... அதிலும் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் இதனால் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர்... குறைந்த பட்சம் குழந்தைகளைப் படுக்க வைக்கக் கூட படுக்கைகள் வழங்கப்படாத நிலையில், தங்கள் உடமைகளுடன் பிரசவ வலியில் பெண்கள் தரையில் படுத்திருப்பது காண்போரைப் பதைபதைக்கச் செய்கிறது.


Next Story

மேலும் செய்திகள்