கைக்குழந்தைகளை வைத்து சாலையில் பிச்சை எடுத்த பெண்கள் - திருப்பூரில் அதிர்ச்சி | tirupur | thanthi tv

x

கைக்குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்ததாக இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி மற்றும் ரோசன்பாய் என்ற இரண்டு பெண்கள் கைக்குழந்தையை வைத்து கொண்டு பிச்சை எடுத்து வந்தனர். இதைக் கண்ட குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், பல்லடம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட மகளிர் போலீசார், இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்