மனு அளிக்க குழந்தைகளுடன் வந்த பெண் - வறுமையை அறிந்து மனிதம் காத்த எஸ்பி

x

வேலூரில், வீட்டு மனை பிரச்னை தொடர்பாக மனு அளிக்க வந்த பெண் மற்றும் குழந்தைகளுக்கு எஸ்.பி. உணவு வாங்கிக் கொடுத்தார். வேலூர் மாவட்டம் ராமாலை பகுதியைச் சேர்ந்த வேலாயுதம் - அன்பரசி தம்பதிக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு அரசு சார்பில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலையில், இடப்பிரச்னை தொடர்பாக எஸ்.பி. அலுவலகத்திற்கு, தனது 4 குழந்தைகளுடன் மனு அளிக்க வந்தார்.

மனுவை பெற்ற எஸ்.பி. ராஜேஷ் கண்ணன், பெண்ணின் வறுமையை அறிந்து, அனைவருக்கும் சாப்பாடு வாங்கி கொடுத்தது அலுவலக காவலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்