பல் சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழப்பு.. கதவில் ஒட்டப்பட்ட அதிர்ச்சி போஸ்டர்.. மருத்துவ இணை இயக்குநர் பரபரப்பு அறிக்கை

x

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், பல் மருத்துவர் அளித்த சிகிச்சையால், பெண் உயிரிழந்த புகாரில், உண்மை தன்மை இல்லை என, விசாரணை நடத்திய மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வாணியம்பாடி நியூடவுன் பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவர், பல் மருத்துவ சிகிச்சைக்காக, பி.ஜே. நேரு சாலையில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இந்திராணிக்கு பல் மருத்துவர் அறிவரசன், சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது, அதன் பிறகு, இந்திராணிக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டு உயிரிழந்தார். தவறான சிகிச்சையால்தான் தாய் இறந்ததாக, பல் மருத்துவர் அறிவரசன் மீது, அவரது மகன் வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர் அறிவரசனால், 10 பேர் உயிரிழந்ததாக இழந்ததாகக் கூறி, 10 பேரின் பெயர் பட்டியலை மர்ம நபர்கள் மருத்துவமனையின் கதவில் ஒட்டிச் சென்றனர். இந்த புகார் குறித்து, மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் மாரிமுத்து விசாரணை நடத்திய நிலையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அதில், பல் மருத்துவ சிகிச்சையால் பெண் உயிரிழந்ததாக கூறப்படுவது மருத்துவ ரீதியாக ஏற்ககூடியது அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்