ஏமாற்றி விட்டு 2வது திருமணம் செய்ததாக பாஜக எம்எல்ஏ மீது பெண் பரபரப்பு புகார் - போட்டோக்களை காட்டி கதறல்

தன்னை ஏமாற்றிவிட்டு இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக, புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர் மீது சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், புதுச்சேரி காலப்பட்டு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான கல்யாணசுந்தரம், கடந்த 2008 ஆம் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், தனக்கு குழந்தை பிறந்து தாய் வீட்டில் இருந்த போது, இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே, கல்யாண சுந்தரத்தின் மீது நடவடிக்கை எடுத்து, அவரை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்

X

Thanthi TV
www.thanthitv.com