இத்துடன் அரசியலுக்கு 'எண்ட் கார்டு'.. நாடாளுமன்றத்தில் இறுதி உரையாற்றிய நியூசிலாந்து பிரதமர்

x

நியூசிலாந்து நாட்டின் பிரதமராக 37 வயதில் பதவியேற்ற ஜெசிந்தா ஆர்டெர்ன், அரசியலில் இருந்து விடைபெறுவதாக அறிவித்ததை அடுத்து, நேற்று நாடாளுமன்றத்தில் இறுதி உரையாற்றினார். உலகில் இளம் வயதில் ஒரு நாட்டின் உயரிய பதவியை அடைந்த பெண் என்ற சிறப்பை பெற்றிருந்த ஜெசிந்தா, கடந்த ஜனவரி மாதம் நியூசிலாந்தின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது தொழிலாளர் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இனி அரசியலில் இருந்து விலகி தனது நான்கு வயது மகளுடன் நேரம் செலவிட விரும்புவதாக ஜெசிந்தா தெரிவித்திருந்த நிலையில், நேற்று நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மிகவும் உணர்ச்சிகரமாக தனது இறுதி உரையை அவர் ஆற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்