80 ஆண்டுக்கு முன்பு வின்ஸ்டன் சர்ச்சில் புகைத்த சுருட்டு ஏலம்

x

1944-ல் வின்ஸ்டன் சர்ச்சில் புகைத்த சுருட்டு ஏலத்திற்கு வந்துள்ளது... இங்கிலாந்தின் முன்னாள் பிரதமரும், உலகத் தலைவர்களில் ஒருவருமான வின்ஸ்டன் சர்ச்சில், 80 ஆண்டுகளுக்கு முன்பு புகைத்த சுருட்டு ஏலம் விடப்பட உள்ளது. இந்த சுருட்டு வரும் ஜூன் 16ம் தேதி Hansons ஏலதாரர்களால் ஏலம் விடப்பட உள்ளது... வின்ஸ்டன் சர்ச்சில் புகைத்த சுருட்டு சுமார் 92 ஆயிரத்திற்கு ஏலம் போக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சில் சுருட்டுகளை மிகவும் விரும்பினார்... எப்போதாவது தனக்கு எந்த வகையிலாவது உதவியவர்களுக்கு அவற்றை பரிசாகவும் வழங்கியுள்ளார்... அந்த வகையில் மேற்கண்ட சுருட்டானது சர்ச்சிலால், மொராக்கோவின் தூதரகத்திற்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்