விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்... இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ஜோகோவிச்

x

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார்.

ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் யானிக் சின்னருடன் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் மோதினார். இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி, சின்னரை ஜோகோவிச் திணறடித்தார். முதல் செட்டை 6-க்கு 3 என்ற கணக்கில் கைப்பற்றிய ஜோகோவிச், 2வது செட்டை 6-க்கு 4 என்ற கணக்கில் வசப்படுத்தினார். தொடர்ந்து, 3வது செட்டை டைபிரேக்கரில் 7க்கு 6 என்ற கணக்கில் கைப்பற்றிய ஜோகோவிச், தொடர்ச்சியாக 5ம் முறையாக விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

--


Next Story

மேலும் செய்திகள்