விம்பிள்டன் இறுதிப்போட்டி - ஆத்திரம் அடைந்த ஜோகோவிச்... டென்னிஸ் பேட்டை உடைத்து ஆக்ரோசம் - ரூ.6.56 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு

x

விம்பிள்டன் இறுதிப்போட்டியில் டென்னிஸ் பேட்டை உடைத்து, ஆக்ரோஷமாக நடந்து கொண்ட ஜோகோவிச்சிற்கு, சுமார் 6 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆடவர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். போட்டியின் போது அல்கரஸ் முழு ஆதிக்கம் செலுத்தியதால், ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் தனது டென்னிஸ் பேட்டை வலைக்கம்பத்தில் அடித்து உடைத்தார். போட்டி நடுவர் எச்சரித்தும், ஜோகோவிச் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், நடத்தை விதிமீறல் குற்றச்சாட்டில், ஜோகோவிச்சிற்கு இந்திய மதிப்பில் 6 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் டென்னிஸ் வீரர் ஒருவருக்கு விதிக்கப்படும் அதிகபட்ச அபராதத்தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்