வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்த தாய்த்தெய்வம்..பாதுகாக்கப்படுமா பல்லவர் கால கற்கோயில்?

x

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள கிராமம் சோழபுரம். பெயரில் சோழத்தை தாங்கி நிற்கும் இவ்வூரில் தற்போது பேசுபொருளாகியுள்ளது பழமையான கற்கோயில்...

1200 ஆண்டுகளுக்கு முன் பல்லவர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் காசி விஸ்வநாதர் கோயில், இன்று ஊருக்கு ஒதுக்குபுறத்தில் சுமார் மூன்று அடி புதையுண்ட நிலையில் காணப்படுகிறது மூலவர் கோபுரத்தை சுற்றியும், கோயிலை சுற்றியும் செடி கொடிகள் காடு போல் மண்டி கிடக்கின்றன. பழங்கால கல்வெட்டுகளையும், பிரம்ம சாஸ்தாவாக அருள்பாலிக்கும் முருகன், சங்கநிதி, பத்மநிதி உள்ளிட்ட அரிய தெய்வ சிற்பங்களை கொண்டிருந்தாலும் யாராலும் கண்டுகொள்ளப்படாத நிலையிலிருந்த கோயிலை, வரலாற்று ஆர்வலர்களின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ளது காட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட தாய்த்தெய்வ சிற்பம்..

தாய்தெய்வ வழிபாட்டில் முக்கிய இடம் பெற்று மூத்ததேவி, பழையோள், மூத்தோள் என என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் தெய்வம் தவ்வை.. பல்லவர் காலத்திற்கு முன்பே தமிழ்நாட்டில் தவ்வை வழிபாடு வேரூன்றிவிட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறும் நிலையில், கோயிலின் தெற்கு பகுதியிலுள்ள காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்ட தவ்வை சிலையே கவனத்தை ஈர்த்துள்ளது காட்டிலிருந்து தவ்வை சிலை மீட்கப்பட்டதை அறிந்து கோயிலில் ஆய்வு செய்த வரலாற்று ஆர்வலர்கள், கோயிலில் உள்ளவை அனைத்தும் பல்லவர் கால புடைப்பு சிற்பங்கள் என தெரிவிக்கிறார்கள்

இந்து சமய அறநிலையத்துறையும், தொல்லியல் துறையும் இணைந்து கோயிலையும், அரியவகை சிற்பங்களையும் பாதுகாக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். பல்லவர் கால கோயிலும், அரியவகை சிற்பங்களும் காலப்போக்கில் மறைந்துவிடமால் நிலைத்து நின்று, வரலாற்றை தொடர்ந்து பறைசாற்ற வேண்டுமென்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்