சத்துணவு மையங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுமா? - அரசின் புள்ளி விபர கணக்கெடுப்பால் அதிர்ச்சி

x

சத்துணவு மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் தமிழக அரசு புள்ளி விபர கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருவதாக தமிழக சத்துணவு ஊழியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

தற்போது ஒரே பள்ளி வளாகத்தில் செயல்படும் சத்துணவு மையங்கள், 3 கிலோ மீட்டர் சுற்றுக்குள் செயல்படும் மையங்களின் விவரங்களை அரசு சேகரித்து வருவது சத்துணவு ஊழியர்கள் மத்தியில் வேலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஊராட்சி ஒன்றியங்கள், மாநகராட்சி, நகராட்சிகளுக்கு உட்பட்ட அனைத்து சத்துணவு மையங்களையும் கணக்கில் கொண்டு வரும் அரசு, வட்டாரத்தை பொறுத்தவரை ஊராட்சியினை அடிப்படையாகவும், மாநகராட்சி, நகராட்சிகளில் வார்டுகளை அடிப்படையாகவும் கொண்டு ஒரு பொது சத்துணவு மையத்தினை அரசு தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அளித்த தேர்தல் வாக்குறுதியின் படி, சத்துணவு ஊழியர்களுக்கு

ஊதிய உயர்வு, பதவி உயர்வு, ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படாத நிலையில், அரசின் இந்த செயல் சத்துணவு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்