CSK போல் வரலாற்றை மாற்றுமா மும்பை?

x

ஐபிஎல் தொடரில் இன்றைய தினம் நடைபெறும் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, நாளை மறுநாள் வெள்ளிக் கிழமையன்று குஜராத்தில் நடைபெறும் போட்டியில் குஜராத் அணியுடன் மோதும். இன்றைய போட்டியில் தோல்வியை தழுவும் அணி, நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறும்.

ஏற்கனவே, நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி, இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் ஞாயிறன்று இறுதிப் போட்டி நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்