இந்தியா Vs மேற்கிந்திய தீவுகள் தொடரை வெல்லுமா இந்தியா..? ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு

x

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்தியா இடையிலான, இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, இன்று தொடங்குகிறது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டோமினிகாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், 141 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டி ட்ரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஏற்கனவே முன்னிலை வகிக்கும் இந்திய அணி, 2வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்போடு விளையாடும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்