வீட்டை உடைத்து உள்ளே புகுந்த காட்டு யானைகள்..! உயிரை கையில் பிடித்து கதறிய தாய், மகன் - கூடலூர் அருகே அதிர்ச்சி

x

கூடலூர், பந்தலூர் பகுதிகளில் பலாப்பழ சீசன் நிலவுகிறது. இந்நிலையில், உணவைத் தேடி குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானைகள் படையெடுத்து வருகின்றன. கூடலூரை அடுத்துள்ள ஓவேலி, காமராஜ் நகர் பகுதியில், நேற்று ஒருவரது வீட்டை யானை உடைத்த சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே பகுதி​யில் சந்திரசேகரன் என்பவரது வீட்டிற்குள் புகுந்த காட்டு யானைகள், வீட்டின் ஒரு பகுதியை உடைத்ததுடன், பொருட்களையும் சேதப்படுத்தின. வேறொரு அறையில் சந்திரசேகர் மற்றும் அவரது தாயார் பதுங்கியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீட்டிலிருந்த சமையல் பொருட்கள், பீரோ, கட்டில் போன்றவற்றை சேதப்படுத்திய யானைக்கூட்டம், 2 மணி நேரத்திற்குப் பின்னர் வனப்பகுதிக்குச் சென்றது. குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைவதைத் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்