திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானை.. வனத்துறையினர் விடுத்த எச்சரிக்கை..!

x

திடீரென ஊருக்குள் புகுந்த காட்டு யானை.. வனத்துறையினர் விடுத்த எச்சரிக்கை..!


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஊருக்குள் புகுந்த யானை பவானி ஆற்றை கடந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது... வனப்பகுதியிலிருந்து வழிதவறி வந்த ஒற்றை காட்டு யானை காசிபாளையம் பகுதியில் கரும்பு காட்டுக்குள் தஞ்சமடைந்தது. விடிய விடிய யானையை விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு விரட்டியிருந்தனர்.

தற்போது யானை சத்தியமங்கலம் அருகே இக்கரை நெகமம் பகுதியில் முகாமிட்டு பவானி ஆற்றை கடந்தது. பின்னர் கரையோரம் இருந்த விவசாய தோட்டத்தில் புகுந்தது. யானையை அங்கிருந்து வனத்துறையினர் விரட்டி வரும் நிலையில், காட்டு யானை செல்லும் வழித்தடத்தில் விவசாயிகள் யாரும் நிற்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்