கரும்பு தோட்டத்தில் புகுந்த 'காட்டு யானை' அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்...

x

கரும்பு தோட்டத்தில் புகுந்த 'காட்டு யானை' அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்...


கோபிசெட்டிபாளையம் அருகே, வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானையை, விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


ஈரோடு மாவட்டம் விளாமுண்டி வன பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, காசிபாளையம் கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்திற்குள் புகுந்தது. இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், ட்ரோன் கேமிரா மூலம் தீவிரமாக கண்காணித்து, காட்டு யானையை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனிடையே, கிராம மக்களுக்கு ஒலி பெருக்கிகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஜேசிபி உதவியுடன் யானையை விரட்டும் பணி நடைபெற்றது. ஆனால், கரும்பு தோட்டத்தில் இருந்து வெளியேறிய யானை, மின் கம்பங்களை சேதப்படுத்திவிட்டு, காராப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் தஞ்சம் அடைந்துள்ளது. இந்நிலையில், வனத்துறையினர் யானையை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்