கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமை-4 மணி நேரம் போராடி வனத்துறை மீட்பு

குன்னூர் அருகே, கழிவு நீர் தொட்டியில் தவறி விழுந்த காட்டெருமையை நான்கு மணி நேர போராட்டத்திற்கு பிறகு வனத்துறையினர் மீட்டனர்.

தனியார் தேயிலை தோட்டத்தில் உள்ள தற்காலிக கழிவுநீர் தொட்டியில், காட்டெருமை தவறி விழுந்து உயிருக்கு போராடுவதாக, வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.

உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு மற்றும் வனத்துறையினர், நான்கு மணி நேரம் போராடி, ஜேசிபி வாகன உதவியுடன் காட்டெருமையை பத்திரமாக மீட்டனர்

X

Thanthi TV
www.thanthitv.com