கணவனை வீட்டில் பூட்டிவிட்டு சொந்த மகனையே கிட்னாப் செய்வது போல் தூக்கி சென்ற தாய் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

x

சென்னை அருகே, கருத்து வேறுபாட்டால் பிரிந்திருந்த கணவனை, வீட்டில் பூட்டிவிட்டு, மகனை தாய் தூக்கிக் கொண்டு செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த தொகுப்பு...

செங்கல்பட்டு மாவட்டம் சேலையூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட செம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஷரித். இவருக்கும் சுபைதா பேகம் என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி, 7 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருந்த சுஹைல், தனது 7 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார்.

கணவரிடம் இருந்து மகனை மீட்டுத் தருமாறு, சுபைதா, ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது, 7 வயது மகன், தனது தந்தையுடன் இருப்பதாக கூறிய நிலையில், சட்டப்படி நீதிமன்றத்தில் அணுகி குழந்தையை பெற்றுக் கொள்ளுமாறு, சுபைதாவிற்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், மகனின் ஏக்கத்தில் தவித்து வந்த சுபைதா, கணவன் வசிக்கும் குடியிருப்பிற்கு, தனது உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார்.

விறுவிறுவென அடுக்குமாடி குடியிருப்புக்குள் சென்ற சுபைதா, மகனை தன்னிடம் தந்துவிடுமாறு, கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை ஷரித் ஏற்க மறுக்கவே, அவர் அசந்த நேரம் பார்த்து, வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டிய சுபைதா, தனது மகனை தூக்கிக் கொண்டு, கார் நிற்கும் பகுதிக்கு ஓடினார். இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.

கதவை பூட்டியதால் வெளியே வர முடியாத ஷரித் கூச்சலிடவே, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை திறந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, காவல்நிலையம் சென்ற ஷரித், நடந்த சம்பவங்களைக் கூறி, மகனை மீட்டுத் தருமாறு போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்