கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை கொன்ற மனைவி... ஒரு மாதம் கழித்து உண்மையை கண்டுபிடித்த காவல்துறை...

x

சடலமாக மீட்கப்பட்டவர் பாரதி. 35 வயதாகிறது. தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த கீழ்மாந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். 8 வருடங்களுக்கு முன்பு திவ்யா என்ற பெண்ணோடு திருமணம் நடந்திருக்கிறது. தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்... போதிய வருமானம் இல்லாமல் குடும்பத்தில் வறுமை அதிகரித்திருக்கிறது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்திருக்கிறது. பிழைப்புக்காக சொந்த ஊரைவிட்டு சென்னையில் வேலைக்குச் சென்றிருக்கிறார் பாரதி. இந்த சூழலில்தான் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாரதி... கீழ்மாந்தூர் கிராமத்தில் நடைப்பெற்ற திருவிழாவில் கலந்துகொள்ள சொந்த ஊர் திரும்பியிருக்கிறார்... மனைவி பிள்ளைகளுடன் திருவிழாவில் கலந்து கொண்டவர்... திருவிழா முடிந்த சில நாட்களில் மாயமாகியிருக்கிறார்... பாரதியின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப்பில் இருந்திருக்கிறது.

பாரதியின் சகோதரி செல்போன் சுவிட்ச் ஆப்பில் இருப்பதை குறித்து திவ்யாவிடம் கேட்டிருக்கிறார். அவரிடமிருந்து சரியான பதில் எதுவும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், பாரதியை கண்பிடிக்க காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்... ஒரு மாத விசாரணைக்கு பின்புதான் அந்த பகீரங்க உண்மையை போலீசார் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆம், பாரதியை கொலைச் செய்தது வேறுயாருமில்லை... பாரதியின் மனைவி திவ்யா!கணவர் வெளியூருக்குச் சென்ற பிறகு ஜே.ஆர்.ஜே. நகரை சேர்ந்த டேவிட் என்கிற சதீஷ்குமார் வயலில் திவ்யா வேலை செய்துவந்துள்ளார். அப்போது திவ்யாவிற்கும் சதீஷ்குமாருக்கும் இடையில் தகாத உறவு ஏற்பட்டிருக்கிறது. மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் திருவிழாவிற்கு வந்த பாரதிக்கு தெரியவந்துள்ளது. கள்ளக்காதலை கைவிடுமாறு திவ்யாவை கண்டுத்திருக்கிறார் பாரதி. கணவரின் கண்டிப்பால் ஆத்திரமடைந்த திவ்யா கள்ளக்காதலன் சதீஷ்குமாரை வீட்டிற்கு வரவழைத்து பாரதியை கழுத்தை நெரித்து கொலைச் செய்திருக்கிறார்...

கள்ளக்காதலியுடன் சேர்த்து பாரதியை தீர்த்துகட்டிய சதீஷ்குமார்...தான் கான்டிராக்ட் எடுத்து வேலைச் செய்துவந்த பட்டம் குறுக்கு ரோடு பாலத்தில் பாரதியின் உடலை குழி தோண்டி புதைத்திருக்கிறார். இது தெரியாமல் சடலத்தின் மீது தார் சாலையும் போடப்பட்டிருக்கிறது... இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவுச் செய்த காவல்துறையினர் சதீஷ்குமார் மற்றும் திவ்யா மீது வழக்குப்பதிவுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்