மருத்துவமனைக்கு ஏன் நடந்து அழைத்துச் செல்லப்பட்டார்கள்? - நீதிபதிகள் சரமாரி கேள்வி

x

சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் அதீக் அகமது, அஷ்ரப் அகமது விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க உத்தர பிரதேச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் சுட்டு கொல்லப்பட்ட தாதாக்கள் அதீக் அகமது, அஷ்ரப் அகமது விவகாரத்தை உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரிக்க கோரி பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில், இரு தாதாக்களும் 30 ஆண்டுகளாக கடுமையான குற்றங்களை புரிந்து வந்ததாகவும், அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பழி தீர்க்கும் நோக்கில் இருவரையும் சுட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், மேலும், சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் உத்தர பிரதேச அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, "இருவரையும் மருத்துவமனை வரை ஏன் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லவில்லை?... ஏன் நடந்து அழைத்துச் செல்லப்பட்டார்கள்?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். குறைந்த தூரம் என்பதால் நடந்தே அழைத்துச் செல்லப்பட்டார்கள் என உத்தர பிரதேச அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், விசாரணைகளின் விவரங்கள்


Next Story

மேலும் செய்திகள்