பொங்கல் முடிஞ்சி ஒன்றரை மாசம் ஆச்சு..ஏன் தரவில்லை ? மக்கள் ஆவேசம் - தேங்கி கிடக்கும் வேட்டி, சேலைகள்..

x
  • கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கலுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி-சேலை, அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேங்கி கிடப்பதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • ஆண்டுதோறும் பொங்கலுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம்.
  • அதன்படி, இந்தாண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் இலவச வேட்டி - சேலை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
  • இந்நிலையில், கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில், ஏராளமான வேட்டி, சேலை பொது மக்களுக்கு வழங்கப்படாமல் தேங்கி கிடக்கின்றன.
  • பொங்கல் முடிந்து ஒன்றரை மாதங்களாகியும் 20 சதவீதத்தினருக்கு கூட இதுவரை வேட்டி, வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது,இந்நிலையில், அந்த வேட்டி, சேலைகளை பொதுமக்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்