"என் வழியை ஏண்டா மாத்தினீங்க.."திருவிழா கூட்டத்தில் திடீரென நாகப்பாம்புபோல் ஆடிய பெண்

x

சிதம்பரத்தில் அம்மன் வீதி உலாவின்போது திடீரென சாமியாடிய இளம்பெண், ஏன்டா என் வழியை மாத்துனீங்க என்று கேள்வி எழுப்பியது, பரபரப்பை ஏற்படுத்தியது. ஆடிக் கடைசி வெள்ளியை முன்னிட்டு பெருங்காலூர் மாரியம்மன் கோவிலில் விமர்சையாக திருவிழா கொண்டாடப்பட்டது. திருவிழாவில், என் வழியை ஏண்டா மாத்தினீங்க என்று திடீரென இளம் பெண் சாமியாடியபடி கேள்வி எழுப்பினார். சாமியாடிய இளம்பெண் ஆக்ரோஷமாக பேசியதால், பக்தர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. இதற்கு நடுவில் நாகப் பாம்புபோல் திடீரென பெண் ஒருவர் நடனமாடி கூட்டத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்