முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - மம்தா பானர்ஜி ஓபன் டாக்!

x

சென்னை வந்த மேற்கு வங்க முதல்வர் ம‌ம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். மேற்கு வங்க ஆளுநர் இல.கணேசன் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி 2 நாள் பயணமாக சென்னை வந்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ம‌ம்தா பானர்ஜி சந்தித்து பேசினார். 20 நிமிடங்கள் இருவரின் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அமைச்சர் துரைமுருகன், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி எம்.பி, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ உள்ளிட்​டோர் உடனிருந்தனர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது, எந்தவிதமான அரசியல் குறித்தோ, இரண்டு மாநில ஆளுநர்களின் செயல்பாடு குறித்தோ ஆலோசிக்க வில்லை என்றனர்.


Next Story

மேலும் செய்திகள்